திராவிட திருமணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணத்தை சட்டமாகக் கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் இல்ல திருமண…

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணத்தை சட்டமாகக் கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் இல்ல திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், திமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினர் தனது கடமையைச் செய்வதில் ஒருபோதும் தலையிட மாட்டேன் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வரும் நாட்களில் கழகம் மாபெரும் வெற்றி அடையும் என்றும் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் என இனி எந்தத் தேர்தல் வந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். மேலும் சீர்திருத்தத் திருமணம் தமிழகத்தில் சட்டமாக இருப்பது போன்று இந்தியா முழுவதும் சட்டமாக வர வேண்டும் என்றும் அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், இதை சீர்திருத்த திருமணம் என்று கூறாமல் திராவிட திருமணம் என கூறுவதுதான் சரியாக இருக்கும் என முதலமைச்சர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.