புதுச்சேரி மத்திய சிறையில் செல்போன் பதுக்கி வைத்த கைதிகள் மீது போலீசார் வழக்கு!

புதுச்சேரி மத்திய சிறையில் கழிவறை அருகே செல்போஃன் பதுக்கி வைத்தது தொடர்பாக, ரவுடி உட்பட இரண்டு கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி காலாபட்டு பகுதியில் அமைந்துள்ளது மத்திய…

புதுச்சேரி மத்திய சிறையில் கழிவறை அருகே செல்போஃன் பதுக்கி வைத்தது தொடர்பாக, ரவுடி உட்பட இரண்டு கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி காலாபட்டு பகுதியில் அமைந்துள்ளது மத்திய சிறைச்சாலை. இங்கு 100
தண்டனை கைதிகள், 200 க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குண்டாஸில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி குட்டி சிவா
சிறையில் இருந்து, செல்போன் மூலமாக வெளியில் இருக்கும் தனது கூட்டாளிகளுடன்
பேசி வருவதாக சிறை கண்காணிப்பாளர் பாஸ்கருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின்பேரில், சிவா அறையை சோதனை செய்த போது அங்கு செல்போன்
எதுவும் இல்லை. தொடர்ந்து கண்காணித்ததில் நேற்று மாலை கழிவறை அருகே சென்ற
சிவா, தரையில் புதைத்து வைத்திருந்த செல்போனை எடுத்து பேசிய போது சிறை
காவலர்கள் அவரை பிடித்தனர். மேலும் செல்போனை பறிமுதல் செய்து விசாரித்ததில்,
சமீபத்தில் காரைக்காலில் போலீ நகை விற்பனை செய்த வழக்கில் கைது செய்ப்பட்ட,
முகமது காமில் என்பவர் செல்போன் கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக, சிறை கண்காணிப்பாளர் பாஸ்கர் காலாபட்டு காவல் நிலையத்தில்
புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது காமில்
மற்றும் குட்டி சிவாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணைக்கு பிறகு தான் முழு தகவல் தெரியவரும் என போலீசார் தகவல்
தெரிவித்துள்ளனர்.

—-கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.