கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை பாஜகவில் இணைந்தார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கட்சியை பலப்படுத்தும்
நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது. நடிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் கண்ணதாசன் மகன் அண்ணாதுரை பாஜகவில் இணைந்துள்ளார்.
அவரை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அண்ணாதுரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மறைந்த நடிகர் விவேக் உடன் இணைந்து நடித்துள்ளார். கவிஞர் கண்ணதாசன் திமுகவில் இருந்தவர் . கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் வெளியேறி ஈ.வி.கே.சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியை தொடங்கினார். பின்னர் அக்கட்சி காங்கிரசுடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது.





