தமிழகம் செய்திகள்

நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது பாமக – சிறப்பம்சங்கள் என்ன?…

தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில், பாமகவின் 2023-2024ஆம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கை இன்று தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் வெளியிடப்பட்டது. விழுப்புரத்தில் பாமக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுதொடர்பாக பாமக வெளியிட்டுள்ள நிழல் நிதிநிலை அறிக்கையில், 2023-24-ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை வரும் 20ம் தேதி தமிழக சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த 2003-04 ஆம் ஆண்டு முதல் நிழல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி, அதன் 21-ஆவது நிழல் நிதிநிலை அறிக்கையை (Shadow Budget) பொதுமக்களின் மேலான பார்வைக்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. இந்தப் பணியை தமிழக மக்களுக்கு தான் ஆற்றக்கூடிய மகத்தான சமூக, பொருளாதார, அரசியல் கடமையாக பாமக கருதுகிறது.

இந்த மாநில மக்கள் மீதும், சமூக நீதியோடு கூடிய வளர்ச்சியின் மீதும், ஏழை, எளிய, நடுத்தர அனைத்துத் தரப்பு மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் மீதும் உண்மையான, உணர்வுப்பூர்வ அக்கறைக் கொண்டுள்ள எங்கள் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா சிந்தனைகள், விவேகம், வழிகாட்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நிழல் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி – தமிழக மக்கள் மாமன்றத்தில் முன்வைக்கும் தமிழக அரசிற்கான 2023 – 2024 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாமகவின் நிழல் நிதி அறிக்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள அம்சங்கள்:

  1. தமிழ்நாட்டை  போதை இல்லா மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள்
  2. அரசுத் துறைகள் மூலம் 1.50 லட்சம் பேருக்கு அரடு வேலை வழங்குதல்
  3. தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 80 சதவீதம் இடஒதுக்கீடு
  4. கல்வி மற்றும் மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை பெருமளவில் உயர்த்துத
  5. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் நிதியுதவி
  6. ரூ. 1 லட்சம் கோடியில் நீர்ப்பாசனத் திட்டங்களை 5 ஆண்டுகளில் செயல்படுத்துதல்
  7. தமிழ்நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆராய்தல்
  8. வரியில்லா  வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை
  9. நிர்வாக சீர்திருத்தம்
  10. வெளிப்படைத்தன்மை

மேற்கண்ட 10 அம்சங்களை அடிப்படையாக கொண்ட 2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பாமக தயாரித்து வெளியிட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Web Editor

அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை

Halley Karthik

கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோவில்: இந்திய தூதரகம் கண்டம்

Web Editor