பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏவும், கல்வி அமைச்சருமான ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், ஐபிஎஸ் அதிகாரி ஜோதி யாதவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், ரூப்கர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூர் சாஹிப் தொகுதியில் முதன்முறையாக சட்டப் பேரவை உறுப்பினரான ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், தற்போது முதல்வர் பகவந்த் மான் அரசில் கல்வி அமைச்சராக உள்ளார். ஆனந்த்பூர் சாஹிப்பில் உள்ள கம்பீர்பூர் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் வழக்கறிஞராகவும் உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2017-ல் நடைபெற்ற தேர்தலில் சாஹ்னேவால் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆம் ஆத்மியின் இளைஞர் பிரிவுக்கு தலைமை வகித்தார். பஞ்சாபில் ஐபிஎஸ் அதிகாரியான யாதவ், மான்சா மாவட்டத்தில் காவல் துறை கண்காணிப்பாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஆஸ்கர் விருதை சொந்தமாக்கிக் கொண்ட கார்த்திகி கோன்சலேவ் யார்..?
யாதவ் ஜோதி ஹரியாணாவில் உள்ள குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர். இவர்களுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இம்மாத இறுதியில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-ம.பவித்ரா