பாமக நிறுவனரும் தமிழ் நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான மருத்துவர் ராமதாஸின் 87-ஆவது பிறந்தநாள் இன்று. இதனால் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
“பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முதல்வர், முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் ராமதாஸ் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.







