கேதார்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அம்மாநில வளர்ச்சிக்காக 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். முன்னதாக, இந்துக்களின் மிக முக்கியமான தலங்களில் ஒன்றான கேதார்நாத் கோயிலில் அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த பெண்கள் கையால் நெய்து பரிசாக வழங்கிய சோழா டோரா என்றழைக்கப்படும் பாரம்பரிய உடையணிந்து பிரதமர் வழிபாடு நடத்தினார். இதனை தொடர்ந்து, கேதார்நாத்தில் உள்ள ஆதி குரு சங்கராச்சாரியார் சமாதியில் அமைப்பட்டுள்ள அவரது பிரமாண்ட சிலைக்கும் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
கேதார்நாத் பகுதியில் ரோப் கார் அமையவுள்ள இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கு தினக்கூலியாக வேலை செய்யும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடியனார்.







