பிரதமர் மோடி பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, நாடு முழுவதும் பாஜக சார்பில்…

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் என பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரமரின் பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1571003347402104832?t=aCoE6gQGdWVcGtDhTwpqgQ&s=08

இதுகுறித்து, முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  ‘பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.