பாரத ரத்னா எம்ஜிஆர், பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாரத ரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். திரையுலகிலும், அரசியலிலும் பலராலும் மதிக்கப்பட்டவர் எம்ஜிஆர் என தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர் முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல்வேறு முயற்சிகளைத் தொடங்கியதாகக் கூறியுள்ளார். மேலும், எம்ஜிஆரின் பிறந்த நாளில் அவருக்கு தனது புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.







