முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

மனதின் குரல் நிகழ்ச்சியில் உத்திரமேரூர் குறித்து பேசிய பிரதமர் மோடி – நன்றி தெரிவித்த கிராம மக்கள்

மனதின் குரல் நிகழ்ச்சியில் உத்திரமேரூர் குறித்து பெருமையாக பேசிய பிரதமர் மோடிக்கு உத்திரமேரூர் பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி மன்கிபாத்  எனும் ”மனதின் குரல்” வானொலி நிகழ்ச்சியின் மூலம்
நாட்டு மக்களிடம் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் “மனதின் குரல்”  நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டு கோவில் குறித்தும், அதன் பெருமைகள் குறித்தும் உரையாற்றினார். 1500 ஆண்டுகளுக்கு முன்னரே பஞ்சாயத்து ராஜ் அமைக்கப்பட்டதற்கான இடம் உத்திரமேரூர் என்றும் அதற்கான ஆதாரமாக கல்வெட்டு அங்கு உள்ளது என்றும்  பிரதமர் மோடி பேசினார்.

இதனை அடுத்து உத்திரமேரூர் பகுதி மக்கள் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்ததோடு
பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர்  கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  பிரதமர் மோடி அவர்கள் சென்னைக்கு வெகு அருகில் உள்ள உத்திரமேரூர் என்னுமிடத்தில் முதல் முதல் குடவோலை தேர்தல் நடைபெற்றது, அதற்கான ஆதாரங்கள் அங்கு கல்வெட்டாக உள்ளது என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி அவர்கள் பெருமைப்பட பேசிய உத்திரமேரூர் குடவோலை கல்வெட்டுக்
கோவிலை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகளும், ஆராய்ச்சி மாணவர்களும் வர
வாய்ப்புள்ளதாகவும் உத்திரமேரூர் தொகுதி மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேர்தல் அதிகாரி வாயிலாக திமுக முறைகேடு: அதிமுக ஒருங்கிணைப்பாளர் குற்றச்சாட்டு

G SaravanaKumar

புதிய வேலைமாற்றத்தை விரும்பும் இந்தியர்கள்! ஆய்வில் புதிய தகவல்

Web Editor

காட்டுப்பாக்கத்தில் அதிக மழை…நுங்கம்பாக்கத்தில் அதிவேகத்தில் காற்று…

Web Editor