தூத்துக்குடியில் மீன் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் நிறம் மாறிய உப்பாற்று ஓடையை மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூர்ணி பஞ்சாயத்துக்குட்பட்ட கோமஸ் புரம் பகுதியில் சுமார் 6க்கும் மேற்பட்ட மீன் பதனிடும் தொழிற்சாலைகள் உப்பாற்று ஓடை கரை அருகில் அமைந்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மீன் பதனிடும் தொழிற்சாலைகளில் மீன்களைக் கழுவ மற்றும் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் இரசாயனங்களைச் சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே உப்பாற்று ஓடையில் விட்டு விடுகின்றனர். இதன் காரணமாக உப்பாற்று ஓடையில் உள்ள நீர் முழுவதும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் செந்நிறமாக மாறி ரத்த ஆறு ஓடுவது போல் காட்சியளிக்கிறது.
இதன் காரணமாக அந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அருகே உள்ள உப்பளங்களில் இந்த இரசாயனம் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஓடையில் செந்நிறமாகிய மாறிய கழிவுநீர் கடல் வாழ் உயிரினங்களில் சொர்க்க பூமியாகக் கூறப்படும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளை ஊராட்சியில் உள்ள உப்பாத்து ஓடையில் ஓடக்கூடிய தண்ணீரின் நிறம் மாறி சிவப்பு நிறமாக உள்ளது என கனிமொழி எம்பிக்கு புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட கனிமொழி எம்பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் மாற்றத்திற்காகக் காரணம் குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.