சியர்ஸ் பிரண்ட்ஸ்… மகிழ்ச்சியை வெளிப்படுதிய பிரதமர் மோடி!

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி சியர்ஸ் பிரண்ட்ஸ் என பழரச கோப்பையை உயர்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார்.…

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி சியர்ஸ் பிரண்ட்ஸ் என பழரச கோப்பையை உயர்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு சிறப்பு  விருந்து அளித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இரு நாடுகளின் நட்புறவு இந்திய அமெரிக்க குடிமக்களின் அமைதி மற்றும் வளத்திற்கு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய கமல் ஹாரீஸ், 21 ஆம் நூற்றாண்டில் இந்தியா உலகளாவிய தலைவராக உருவெடுக்க உதவுவதில் உங்கள் பங்கு மற்றும் தலைமைக்கு நன்றி எனபிரதமர் மோடியின் தலைமையை பாராட்டினார். மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல உயிர்களை காப்பாற்றுவதாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, ‘, நமது குடிமக்கள் அனைவரும் அமைதி மற்றும் செழிப்பாக வாழ வேண்டும் என கூறி பழரச.கோப்பையை சியர்ஸ் என உயர்த்தி அருந்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.