அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி சூட்டியுள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள தேசிய நினைவகத்தின் மாதிரியை இன்று மோடி திறந்துவைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரையும் சூட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அளவில் மிகப் பெரிய தீவுக்கு முதல் பரம்வீர் சக்ரா விருதை பெற்றவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. விக்ரம் பத்ரா, ராமசாமி பரமேஸ்வரன், மனோஜ்குமார் பாண்டே, சோம்நாத், சேத்ரபால், சஞ்சய் உள்ளிட்டவரின் பெயர்கள் இந்த தீவுகளுக்கு சூட்டப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்யில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: முதன்முதலாக மூவர்ணக்கொடி இந்த மண்ணில்தான் ஏற்றப்பட்டது. அத்தகைய மண்ணுக்கு சொந்தமானது இந்த அந்தமான். சுதந்திர இந்திய அரசாங்கம் முதல்முறையாக இங்கு உருவாக்கப்பட்டது. இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள். இந்த நாளை பராக்கிரம் திவாஸ் என்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வீர சாவர்க்க்கரும் நாட்டு விடுதலைக்காக போராடிய இன்னும் பல வீரர்களும் இந்த அந்தமான் மண்ணில் சிறைவைக்கப்பட்டனர்.
இந்த 21 தீவுகளுக்கு இன்று பெயர் சூட்டியதன் மூலம் இந்தியா ஒரே பாரதம் என்பதை குறிக்கிறது. நமது ஆயுதப்படைகளின் வீரத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
2018ஆம் ஆண்டு பிரதமர் மோடி அந்தமான் நிகோபார் தீவுகளுக்குச் சென்றபோது அங்குள்ள ரோஸ் ஐலேண்ட் என்ற தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயர் சூட்டப்பட்டது. நீல் தீவு, ஹேவ்லாக் தீவு ஆகியவையும் ஷாஹீத் தீவு, சுயராஜ்ஜியத் தீவு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.