“பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏன்” – ப.சிதம்பரம் கேள்வி

பெகாசஸ் விவகாரம் குறித்து பிரதமர் பேச மறுப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த…

பெகாசஸ் விவகாரம் குறித்து பிரதமர் பேச மறுப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் இவ்விவகாரத்தில் இருந்து விலகிவிட்டதாகவும், பெகாசஸ் விவகாரத்தில் 6 முதல் 7 துறைகள் மீது சந்தேகம் உள்ள நிலையில், ஒரு துறை குற்றமற்றது என்றால் மற்ற துறைகளின் நிலைப்பாடு என்ன? எனவும் வினவியுள்ளார்.

ஒட்டுமொத்த அமைச்சகங்களின் சார்பாக பேசக்கூடிய அதிகாரம் உள்ள பிரதமர் மோடி, பெகாசஸ் விவகாரம் குறித்து பேச மறுப்பது ஏன் எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இவ்விவகாரத்தால் 15 நாட்களாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.