தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் 94% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி, மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : பன்னீர் டிக்கா சாண்ட்விச் பதிலாக சிக்கன் சாண்ட்விச்! ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிய பெண்!
இந்நிலையில், பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பிளஸ் 1 தேர்வெழுதிய 8 லட்சம் மாணவர்களுக்கும் மே 14ஆம் தேதி காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதையடுத்து, dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவ, மாணவிகள் பள்ளிகளில் கொடுத்துள்ள கைப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கவும், இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவை தெரிந்து கொள்ளவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை dge.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்களின் பதிவு எண், பிறந்த தேதி, ஆகியவற்றை பதிவு செய்து முடிவுகளை பார்த்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








