பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவு வெளியீடு: பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!

தமிழ்நாட்டில் இன்று பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளன. இதில் பாடப்பிரிவுகள்வாரியாகவும், முக்கியப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் விகிதத்தை இங்கே காணலாம். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 6-ம்…

தமிழ்நாட்டில் இன்று பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளன. இதில் பாடப்பிரிவுகள்வாரியாகவும், முக்கியப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் விகிதத்தை இங்கே காணலாம்.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியானது. இதில் 94% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியானது. இதில், 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7,534 பள்ளிகளை சேர்ந்த 3,89,736 மாணவர்கள், 4,30,471 மாணவிகள் என மொத்தம் 8,20,207 மாணவர்கள் எழுதினர். இதுதவிர, 5,000 தனித்தேர்வர்களும், 187 சிறை கைதிகளும் பிளஸ்-1 தேர்வை எழுதினார்கள்.

இந்நிலையில், இன்று (மே 14) காலை பிளஸ் – 1 தேர்வு முடிவுகள் இன்று 9.30 மணிக்கு வெளியானது. மொத்தம் 91.17% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தாண்டு மாணவர்களை விட மாணவிகள் 7.43% சதவிகிதம் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். 

இதில் பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்:

  • அறிவியல் – 94.31%
  • வணிகவியல் – 86.93%
  • கலைப் பிரிவுகள்- 72.89%
  • தொழிற்பாடப் பிரிவுகள் – 78.72%

முக்கியப் பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம்

 

  • இயற்பியல் – 97.23%
  • வேதியியல் – 96.20%
  • உயிரியல் – 98.25%
  • கணிதம் – 97.21%
  • தாவரவியல் – 91.88%
  • விலங்கியல் – 96.40%
  • கணினி அறிவியல் – 99.39%
  • வணிகவியல் – 92.45%
  • கணக்குப் பதிவியல் – 95.22%

மேலும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வில், இந்தாண்டு 8,418 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.