“தயவு செய்து யாரும் பின் தொடர வேண்டாம்” – ஷாலினி பதிவால் ரசிகர்கள் குழப்பம்!

நடிகையும் அஜித்குமாரின் மனைவியான ஷாலினி  எக்ஸ் தளத்தில் தனது பெயரில் போலியான கணக்கு ஒன்று உள்ளது என்றும்,  தயவு செய்து யாரும் அதனை பின் தொடர் வேண்டாம் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  …

நடிகையும் அஜித்குமாரின் மனைவியான ஷாலினி  எக்ஸ் தளத்தில் தனது பெயரில் போலியான கணக்கு ஒன்று உள்ளது என்றும்,  தயவு செய்து யாரும் அதனை பின் தொடர் வேண்டாம் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபிஷாலினி.  இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.  அதன்பின் விஜயின் காதலுக்கு மரியாதை திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.  ஷாலினிக்கு முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது.  அந்த படம் இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்த படமாகவே இருக்கிறது.

காதலுக்கு மரியாதை படத்தின் வெற்றிக்கு பிறகு அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார். அமர்க்களம் படத்தில் ஷாலினி நடிகையாக மட்டுமில்லாமல், சொந்தக்குரலில் பாட என்ற பாடலையும் பாடினார்.

பின்னர் கடந்த 2000 ம் ஆண்டு அஜித்குமார் – ஷாலினி திருமணம் செய்து கொண்டனர்.  இந்த தம்பதிகளுக்கு அனோஷ்கா என்ற மகளும்,  ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

அஜித்குமாரின் மனைவியான ஷாலினி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அப்டேட் தருவார்.  இந்த நிலையில்,  எக்ஸ் தளத்தில் தனது பெயரில் போலியான கணக்கு ஒன்று உள்ளது என்றும்,  தயவு செய்து யாரும் அதனை பின் தொடர வேண்டாம் என்றும் ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.