மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற தனி விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. புனே மாவட்டம் பாராமதி பகுதியில் அஜித் பவார் சென்ற விமானம் காலை 8.45 மணிக்கு தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது.
விமானம் விபத்திற்குள்ளான நிலையில், அஜித் பவார் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், விமான விபத்தில் மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் அஜித் பவார் உட்பட 3 பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்துள்ளனர்.







