கேரளாவில் மீண்டும் முதலமைச்சராக பினராயி விஜயன் பதவி ஏற்பு!

கேரளாவில் இடது சாரி முன்னணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதி 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற…

கேரளாவில் இடது சாரி முன்னணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதி 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியானது முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்தது.

71 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில் கடைசி நிலவரப்படி 99 தொகுதிகளை இடது சாரி கூட்டணி கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதனிடையே பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி முன்னணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக கூறி உள்ளார்.

பல்வேறு விரிவான அம்சங்களில் மத்திய அரசானது மாநில, அரசுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய கொரோனா தொற்று நோயின் தாக்கத்தைக் குறைக்க இணைந்து செயல்படவிருப்பதாகவும் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.