இன்று முதல்வர் பொறுப்பேற்கிறார் பினராயி!

கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் 2வது முறையாக இன்று மாலை பதவியேற்கவுள்ளார். கேரள மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை…

கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் 2வது முறையாக இன்று மாலை பதவியேற்கவுள்ளார்.

கேரள மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து மாநிலத்தின் முதலமைச்சராக பினராயி விஜயன் இன்று இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார்.

திருவனந்தபுரத்திலுள்ள விளையாட்டு அரங்கில் மாலை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் முதல்வருடன், 21 அமைச்சர்களுக்கு, ஆளுநர் ஆரிஃப் முகமது பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். முற்றிலும் புதுமுகங்கள் மட்டும் இடம்பெற்றுள்ள இந்த அமைச்சரவையில், பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.