சந்திரயான் 3 லேண்டரின் இருப்பிடம் குறித்த புகைப்படம் வெளியீடு!

சந்திரயான் 3 லேண்டரின் இருப்பிடம் குறித்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இஸ்ரோ செலுத்திய சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டரும், பிரக்யா ரோவரும்…

சந்திரயான் 3 லேண்டரின் இருப்பிடம் குறித்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இஸ்ரோ செலுத்திய சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டரும், பிரக்யா ரோவரும் வெற்றிகரமாக பிரிந்து சென்று, தங்களது பணிகளை சிறப்பாக செய்து வந்தது.

பிரக்யான் ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப் மோடில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் ஸ்லீப் மோடுக்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது. நிலவின் தென் துருவத்தில் சூரிய வெளிச்சம் குறைந்ததால் திட்டமிட்டபடி லேண்டர் ஸ்லீப் மோடுக்கு சென்றுள்ளது.
நிலவில் இருந்து அனுப்பிய புகைப்படங்களை அவ்வப்போது இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

நிலவின் தென் துருவத்தில் இருந்து 600 கி.மீ. தொலைவில் சந்திரயான் -3 நிலை கொண்டுள்ள நிலையில் நாசா புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த முப்பரிமாண படத்தை படத்தை நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ரோவர் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.