#PettaRap | பிரபு தேவாவின் ‘பேட்ட ராப்’ திரைப்படம் – டிரைலர் வெளியீடு!

பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி,…

#PettaRap | Prabhu Deva's 'Petta Rap' - Trailer Released!

பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ் கான், ராஜீவ் பிள்ளை, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜீத்து தாமோதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி இருக்கும்

இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை சஃபையர் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது. இம்மாதம் 27-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பேட்ட ராப் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.