அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

அமலாக்கத்துறை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில்…

அமலாக்கத்துறை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14-ம் தேதி மாற்றப்பட்டது.

இருப்பினும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிப்பதில் இரு நீதிமன்றங்களுக்கு இடையேயும் தெளிவில்லாத சூழல் நிலவியது. இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கில் கைதானதால் அதுதொடர்பான ஜாமீன் மனு மட்டுமின்றி, முழு வழக்கையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற முதன்மை நீதிபதி அல்லி அளித்த அனுமதியின் பேரில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.விரைவில் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.