சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளன.
இந்நிலையில், பட்டினம்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மற்றும் திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க 16 ஆயிரத்து 500 காவலர்கள் மற்றும் ஆளிநர்கள், ஊர்க்காவல் படையை சேர்ந்த 2 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும்
அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், மோட்டார் படகுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.




