சென்னை கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்காக பாதை அமைக்கப்படும் என மேயர் பிரியா ராஜன் அறிவித்துள்ளார்.
மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் கடல் அலை அருகில் சென்று பார்வையிட நிரந்தர பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி இரண்டு மாதங்களில் முடிக்கப்படும் என மேயர் பிரியா ராஜன் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரம் பேருந்து நிழற்குடைகள் நவீனப்படுத்தப்பட்டு உயர்தரத்தில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். சிங்கார சென்னை 2.0 நிதியில் 40 கிலோ மீட்டர் நீளத்திற்கு 184 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், இரண்டாம் கட்டமாக 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிவால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
உலக வங்கி நிதியில் 45 கிலோ மீட்டர் நீளத்திற்கு 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருடம் முழுவதும் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் மேயர் பிரியா ராஜன் அறிவித்துள்ளார்.