பேரறிவாளன் விவகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

பேரறிவாளனை விடுவிப்பது குறித்து தமிழக ஆளுநர் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் முடிவு எடுப்பார் என மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், உச்சநீதி…

பேரறிவாளனை விடுவிப்பது குறித்து தமிழக ஆளுநர் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் முடிவு எடுப்பார் என மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தம்மை வழக்கில் இருந்து விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு மீதான இறுதி விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.

அப்போது மத்திய அரசின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு பேரறிவாளன் தரப்பில், தம்மை விடுவிப்பது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை என்றும் பேரறிவாளன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று மீண்டும் நீதிபதி நாகேஸ்வ ராவ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களுக்குள் முடிவு எடுப்பார் என்று கூறினார்.

நேற்று குடியரசு தலைவருக்கே அதிகாரம் என தெரிவித்திருந்த நிலையில், இன்று மத்திய அரசின் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பேரறிவாளன் விடுதலை குறித்து விரைவில் முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply