குறைகளை செல்போன் மூலம் தெரிவிக்கலாம்: முதல்வர் அறிவிப்பு!

பொதுமக்கள் குறைகளை செல்போன் மூலம் தெரிவிக்கும் புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக…

பொதுமக்கள் குறைகளை செல்போன் மூலம் தெரிவிக்கும் புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக வீட்டு மக்களுக்காக கட்சி நடத்தி வருவதாக சாடினார். தான் ஒரு விவசாயி என்பதால், அவர்களது சிரமத்தை உணர்ந்து பயிர்க்கடன் ரத்து செய்ததாகக் கூறியதோடு, வீடுகள் இல்லாத மக்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்றார்.

மீண்டும் முதலமைச்சராகி அத்திக்கடவு அவினாசி திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைப்பேன் என கூறிய முதல்வர், பொதுமக்களிடம் மனு வாங்கும் பெட்டியை ஸ்டாலின் திறக்க வாய்ப்பில்லை என்றும், ஏனென்றால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்றார்.

மேலும், இன்னும் 10 நாட்களில் 1,100 என்ற எண்ணுக்கு அழைத்து குறைகளை தெரிவிக்கும் திட்டம் தொடங்கப்பட இருப்பதாகவும், இந்த எண்ணுக்கு அழைத்து பொதுமக்கள் தங்களது குறைகளை செல்போன் மூலம் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply