முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வரும் குடியிருப்புகளை காலி செய்ய படிவம் 6 கொடுக்க முயன்றதால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் சுமார் 5,000 குடியிருப்புகளுக்கு பார்ம் 6 கொடுக்க சுமார் 50 வருவாய்த்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் பார்ம் 6 கொடுத்த அடுத்த 3 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வீடுகளை அகற்ற வேண்டாம் எனவும், பட்டா வழங்கிடவும், வருவாய்துறையினர் வெளியே செல்லும்படியும் கோஷமிட்டு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளி மாணவ, மாணவிகள், கை குழந்தைகளுடன் பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரப்பு நிலவி வருகிறது. சம்பவ இடத்திற்கு சென்னை கிண்டி கோட்டாட்சியர் யோகஜோதி மற்றும் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் மணிசேகர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மக்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நீலாங்கரை காவல் ஆய்வாளர் தலைமையிலான ஏராளமான போலீசார் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தனக்கு தானே பிரசவம்; பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

Arivazhagan Chinnasamy

சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். கடந்து வந்த பாதை

Jeba Arul Robinson

“பொடா”வை சந்தித்த போராளி

Vandhana