முக்கியச் செய்திகள் தமிழகம்

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பிரமுகர்கள்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல, ஹெலிகாப்டர் விபத்தில் பல பிரமுகர்கள் இறந்துள்ளனர் அதுகுறித்த செய்தி தொகுப்பு

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்தது தெரியவந்துள்ளது. இதில், 13 பேர் உயிரிழந்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

இதுவரை ஹெலிகாப்டர் விபத்தில், 8 முக்கிய பிரமுகர்கள் இறந்துள்ளார்கள், ஆகஸ்ட் 18, 1945 – ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மே 30, 1973 – ல் மத்திய அமைச்சர், மோகன் குமாரமங்கலம், ஜூன் 23, 1980 – ல் காங்கிரஸ் கட்சியின் சஞ்சய் காந்தி, நவம்பர் 14, 1997 – ல் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் என்.வி.என் சோமு, செப்டம்பர் 30, 2001 – ல் முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியா, மார்ச் 3, 2002 -ல் ஜி.எம்.சி. மக்களவை சபாநாயகர் பாலயோகி, ஏப்ரல் 17, 2004 -ல் நடிகை சவுந்தர்யா, செப்டம்பர் 3, 2009 – ல் ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோர் இறந்துள்ளார்கள்.

Advertisement:
SHARE

Related posts

கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த புதிய அமைச்சகம்

Halley Karthik

வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியில் செல்லுமா? செல்லாதா?; உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு!

Saravana

போயஸ் கார்டனில் வீடு வாங்கிய லேடி சூப்பர் ஸ்டார்

Halley Karthik