முக்கியச் செய்திகள் தமிழகம்

குன்னூர் விரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. விபத்து ஏற்பட்ட பகுதியில் தமிழக வனத்துறை அமைச்சர் க.ராமசந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், வெலிங்டன் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச்செயலாளர், பொதுத்துறைச்செயலாளர், டி.ஜி.பி ஆகியோர் இன்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு புறப்பட்ட்டுச்செல்கின்றனர். பின்னர் அங்கிருந்ந்து சாலை மார்க்கமாக குன்னூர் செல்கின்றனர்.

இதற்கு முன் குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகளுடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதன் பிறகு குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பிரதமரிடம் அவர் விளக்கம் அளிக்க உள்ளார். அதன் பிறகு இன்று மாலையே, அவர் குன்னூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

9 மாதமாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் மின் தடை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Halley Karthik

டோக்கியோ ஒலிம்பிக்; பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி

Saravana Kumar

கோழிக்கோடு விமான விபத்து; விமானியின் தவறுகளே காரணம்

Halley Karthik