கேரளாவில் திருவோண பம்பர் பரிசு தொகை ரூ.25 கோடி பெற்ற ஆட்டோ ஓட்டுநர் நிம்மதி இழந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், மக்கள் பண உதவி கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்வதாகவும் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஸ்ரீவராகத்தை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனுப் (30). இவர் குடும்பம் வறுமை காரணமாக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் மகனின் உண்டியல் பணம் ரூ.500 எடுத்து வந்து கடந்த சில தினங்களுக்கு முன் திருவோண பம்பர் பரிசு சீட்டை பழவங்காடி பகுதியில் உள்ள பகவதி லாட்டரி ஏஜென்சி கடையில் இருந்து வாங்கியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லாட்டரி எடுக்கப்பட்டு ஒரே நாளில் அனுப்க்கு ரூ.25 கோடிக்கணக்கான மாநில அரசின் திருவோண பம்பர் பரிசு தொகை அடித்தது. வரி சலுகை போக 15.75 கிடைக்கும் லாட்டரி நிர்வாகம் தெரிவித்தன. இதனால் ஒரே நாளில் மகிழ்ச்சியாக வாழ்க்கையே மாறிய நிலையில் அனுப் தற்போது நிம்மதி இழந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக வீடியோ வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரையிலும் வங்கி கணக்கில் பணம் வராத நிலையில் உறவினர்கள், பொதுமக்கள் பண உதவி கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்வதாகவும், இதனால் தன் குழந்தைக்கு சுகமில்லாத நிலையில் மருந்து கூட வாங்க செல்ல முடியாத நிலையில் தன் வீட்டை விட்டு வெளியேறி தன் அக்கா வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் கூறி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.