பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உண்மையை பேசியதற்கு கிடைத்த பரிசு, அமைச்சர் பதவி மாற்றம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரே ஒரு முறை உண்மையை பேசியதற்காக, அமைச்சர் பதவி மாற்றம் பரிசாக கிடைத்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண்; என்…

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரே ஒரு முறை உண்மையை பேசியதற்காக, அமைச்சர் பதவி மாற்றம் பரிசாக கிடைத்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண்; என் மக்கள்; யாத்திரை திருப்பரங்குன்றம் தொகுதி, திருநகரில் தொடங்கி, திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் அடைந்தது.

அங்கு பொதுமக்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது;

திருப்பரங்குன்றம் என்று சொன்னாலே சௌராஷ்டிரா நெசவாளர்கள் அதிகமாக இருக்கும் ஊர். நெசவாளர்களுக்கு சில்க் சமத்ரா என்கிற திட்டத்தை பிரதமர் வைத்துள்ளார். திமுக அரசு தொடர்ந்து நெசவாளர்களை வஞ்சித்து வருகிறது. கடன் வாங்குவதில் தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக முதல்வர் மாற்றி உள்ளார். மதுவினால் வரும் வருமானம் தொழு நோயாளி கையில் இருக்கும் வெண்ணைக்கு சமம். தற்போது முதல்வர் மதுவிலிருந்து வரும் பணத்தை வைத்து ஆட்சி செய்ய வேண்டும் என்கிறார். கல்லு கடைகளை திறந்தால் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி வருமானம் கிடைக்கும்.

கிளி ஜோசியம் பார்த்தால் கிளி கூட அவ்வப்போது பேசும். ஆனால் பிடிஆர் பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஒரே ஒரு முறை உண்மையை பேசியதற்கு அவருக்கு கிடைத்த பரிசு அமைச்சரவை மாற்றம். 24 கோடி பெண்கள் தான் 2014 வரை வங்கி கணக்கு வைத்திருந்தார்கள். தற்போது 79 கோடி பெண்கள் வங்கி கணக்கு வைத்திருக்கிறார்கள். 2014 வரை பதினோரு சதவீதம் பள்ளிகளில் தனி கழிப்பறை இல்லை. ஆனால் தற்போது நூறு சதவிதம் உள்ளது. ரஃபேல் விமானத்தில் தற்போது பெண்கள் பயணித்திருக்கிறார்கள். பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு பிதாமர் மோடி தேவைப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தத் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளார். ஆனால் தமிழகத்தில் இருக்க மாட்டார் அவர் டெல்லியில் தான் இருப்பார். அவரை நீங்கள் யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். மதுரை மற்றும் விருதுநகர் எம்பிகளால் எந்த பிரயோஜனமும் இல்லை. கேரளாவில் உள்ள முதலமைச்சர் ராகுல் காந்தியை ஜோக்கர் என சொல்கிறார். ஆனால் இங்கு உள்ள கம்யூனிஸ்ட்கள் வேறு மாதிரி இருக்கிறார்கள். காவிரி விவகாரத்தில் இரண்டு எம்பிக்களும் வாயை திறக்கவில்லை. இவர்களை விட பெரிய டுபாக்கூர் முதலமைச்சர் ஸ்டாலின் தான். அவர் பெங்களூர் சென்றபோது 32 டிஎம்சி தண்ணீர் ஜூலை மாதம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தோம். அப்போது கொழுக்கட்டை வைத்திருந்தாரா.

இந்தியா கூட்டணியை பொறுத்தவரை அவர்கள் அனைவரும் இந்தியாவை சூறையாடியவர்கள். 68 சதவீத பெண்களுக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். மகளிர் உரிமைத் தொகையில் 7000 கோடியில் 2500 கோடி மத்திய அரசின் பணம் அதை கொடுக்க வாய்ப்பு இல்லை. யாத்திரை செல்லும் இடங்களில் பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து வருகிறார்கள். அதை சுத்தம் செய்ய நீங்கள் பின்னால் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் 18 பேர் சுத்தம் செய்து வருகிறார்கள். நாட்டையும் சுத்தம் செய்கிறோம், அரசியலையும் சுத்தம் செய்கிறோம். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.