குடியரசுத்தலைவர் மாளிகைக்கு செல்ல இருக்கும் முதுமலை தெப்பக்காடு யானை பாகன்கள்!

முதுமலை தெப்பக்காடு யானை பாகன்கள் ஒவ்வொரு பகுதியாக டெல்லி குடியரசுத் தலைவா் மாளிகைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்வதாக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். முதுமலை சரணாலயத்தில் உள்ள தெப்பகாடு…

முதுமலை தெப்பக்காடு யானை பாகன்கள் ஒவ்வொரு பகுதியாக டெல்லி குடியரசுத் தலைவா் மாளிகைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்வதாக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.

முதுமலை சரணாலயத்தில் உள்ள தெப்பகாடு யானைகள் முகாமை பார்வையிட்டு யானை பராமரிப்பாளர்களான பொம்மன் பெள்ளி ஆகியோரை சந்திப்பதற்காக ஹெலிகாப்டரில் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நீலகிரி வந்தார். இதனைத் தொடர்ந்து  யானைகள் முகாமை ஒரு மணி நேரம் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிஃபென் விஸ்பரர்ஸ்” ஆவணப்படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடுகள், அதன் யானை பராமரிப்பு மேலாண்மைக்கு உலக அங்கீகாரம் பெற்றது பெருமைக்குரியது என்று கூறினார்.

பின்னர் யானை பராமரிப்பாளர்களான கொம்பன் பெள்ளி தம்பதியினர் மற்றும் மற்ற பாகன்களிடம் உரையாடினார். யானை பாகன்களிடம் அவர்களது அன்றாடம் வாழ்க்கை மற்றும் நடைமுறைகள் பற்றி கலந்துரையாடினார். மேலும் அவர்களுக்கு சால்வை அளித்து குடியரசுத்தலைவர் பெருமிதப்படுத்தினார்.

குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சி முடிந்த பிறகு வனத் துறை அதிகாரிகள் முன்னிலையில் பாகன்களிடம் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“யானை பாகன்களை சந்தித்ததில் குடியரசுத் தலைவா் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறாா். நீங்கள் நன்றாக பணியாற்றியதால் குடியரசுத் தலைவரின் அன்பைப் பெற்றிருக்கிறீா்கள். உங்கள் அனைவரையும் குடியரசுத் தலைவா் மாளிகைக்கு வர வேண்டும் என்று அழைத்திருக்கிறாா். அதனால் ஒவ்வொரு பகுதியாக டெல்லிக்கு செல்ல ஏற்பாடு செய்யப்படும்” இவ்வாறு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.