PBKS vs RR: பஞ்சாப் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி!

ஐபிஎல் லீக் போட்டியில், பஞ்சாப் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இமாசலபிரதேசம் தர்மசாலாவில் நடைபெற்ற 66-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி…

ஐபிஎல் லீக் போட்டியில், பஞ்சாப் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

இமாசலபிரதேசம் தர்மசாலாவில் நடைபெற்ற 66-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய பிரப்சிம்ரன், தவான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தொடரந்து 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி தொடரில் இருந்து வெளியேறியது. பிளே ஆஃப் வாய்ப்பை ராஜஸ்தான் அணி தக்கவைத்தது.

ஐபிஎல் போட்டியில், சென்னை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா? என்பது இன்று தெரியவரும். இன்றைய போட்டியில், டெல்லி அணியுடன் சென்னை அணி மோதுகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் சென்னை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால் இப்போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வானவில் நிற சீருடையில் டெல்லி அணி களமிறங்க உள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே மும்பை, பெங்களூரு, குஜராத் அணிகள் மாற்று சீருடையுடன் விளையாடி உள்ளன. லக்னோ அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் புதிய சீருடையுடன் களம் இறங்க உள்ளது.

புள்ளிகள் பட்டியலில் குஜராத் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை, லக்னோ அணிகள் தலா 15 புள்ளிகளுடன் இரண்டாவது, மூன்றாவது இடத்தையும், பெங்களுரூ அணி 14 புள்ளிகளுடன் 4 வது இட்ததையும் பிடித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.