மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் ரூபாயை மத்திய அரசே அழிக்கிறது” என்று ‘திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி’ விமர்சித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டுகள் சரியான பரிவர்த்தனை நடைபெறாமல் இருந்ததால், தற்போது மே 23-ஆம் தேதி முதல் இவை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் எனவும், அதற்கு பிறகு செல்லுபடி ஆகாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 20,000 ரூபாய் வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ”2 ஆயிரம் ரூபாய் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள , மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் ரூபாயை மத்திய அரசே அழிக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.
He who creates, he who destroys. pic.twitter.com/xc5BP8qeL7
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 19, 2023







