பீகாரில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பாட்னா உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரன் மற்றும் நீதிபதி மதுரேஷ் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு தனது முக்கிய தீர்ப்பை வழங்கியது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறுத்துமாறு சிலர் மேல்முறையீடு செய்தனர். ஆனால் நீதிமன்றம் இன்று மனுவை நிராகரித்து தீர்பு அளித்துள்ளது.
சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தடை செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஐந்து வெவ்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதை நீதிமன்றம் பல நாட்கள் விசாரித்து அதன் முக்கிய முடிவை தற்போது எடுத்துள்ளது. முன்னதாக, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரன் மற்றும் நீதிபதி மதுரேஷ் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு ஐந்து மனுக்களை ஒன்றாக விசாரித்து, விசாரணை முடிந்ததும் தீர்ப்பை ஒத்திவைத்தது.







