மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உள் இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்டையில், மூன்று மாத காலத்திற்குள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கி பிப்ரவரி 24, 2021 அன்று இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.
0.5% தொடர்பாக 31.3.2022 அன்று உச்சநீதிமன்ற தீர்ப்பின் 68 & 73 பத்தியில்… பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் உள் ஒதுக்கீடு கோரி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நியாயமான முறையில் எவ்வாறு நிறைவேற்றலாம் என்பதை தீர்மானிப்பதற்காக பொருத்தமான, நடப்பு காலத்திற்கான தரவுகளைத் திரட்டுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசு முடிவு செய்தால், அதற்கு தடையாக இருக்காது என குறிப்பிட்டிருந்தது.
அதுகுறித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. அதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உள் இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் 31.3.2022 அன்று தெரிவித்திருந்தவற்றில் 68 & 73 ஆம் பத்திகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும், மூன்று மாத காலத்திற்குள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
-ம.பவித்ரா








