‘பாட்டல் ராதா’ படத்தின் டீசர் நாளை மாலை வெளியாகும் – படக்குழு அறிவிப்பு!

குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘பாட்டல் ராதா’ திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் வாயிலாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.…

குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘பாட்டல் ராதா’ திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் வாயிலாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். தற்போது நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பைசன், மலையாளத்தில் பாபா புகா, தண்டகாரண்யம் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

இதுவரை நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், ஜே – பேபி, ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 9 ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : “அடுத்த வாரத்திலிருந்து நான் வேலையில்லாத நபர்.. ஏதாவது வேலை கிடைக்குமா?” – ராகுல் டிராவிட் பேச்சால் சிரிப்பலை!

தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் சஞ்சனா நடராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு “பாட்டில் ராதா” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். அண்மையில் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி மலையாள நடிகர்கள் டொவினோ தாமஸ், பாசில் ஜோசப், பார்வதி திருவொத்து, நிமிஷா சஜயன் , ஸ்வேதா மேனன் உள்ளிட்டவர்களும்  வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.