சென்னை வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி வகுப்பில் 14-வது பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டு காவல் துணை கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் வரவேற்புரையாற்றினார்.




