பாடகி எஸ்.ஜானகி மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு – பிரதமர் மோடி இரங்கல்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி(88), வயது மூப்பு காரணமாக நேற்று மைசூருவில் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பாடகி ஜானகி அம்மா மறைவு இசை மற்றும் கலாச்சார உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. பல்வேறு மொழிகளில் அமைந்த அவரது பாடல்கள், தலைமுறை தலைமுறையாகப் பிரபலமாக இருந்தன. அவை ஈடு இணையற்ற நளினத்துடனும் பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்விற்கும் குரல் கொடுத்தன. அவரது மெல்லிசை, வரும் ஆண்டுகளிலும் கேட்போரைத் தொடர்ந்து வசீகரிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த இசை உலகினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.