தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சீமான், வைகோ உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதே போல் திரைத்துறையை சேர்ந்த சிவக்குமார், இளையராஜா, வைரமுத்து, கங்கை அமரன், பேரரசு, ராதிகா சரத்குமார், சூர்யா உள்ளிட்ட திரைத்துறையினரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.





