தங்கம் விலை நாள்தோறும் புது புது ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.400 குறைந்து, ஒரு கிராம் ரூ. 13,800-க்கும், சவரனுக்கு ரூ.3,200 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,10,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




