கஜகஸ்தானில் வெடித்து சிதறிய பயணிகள் விமானம் – 110 பேரின் நிலை என்ன?

கஜகஸ்தானின் அக்டாவ் அருகே பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், 105 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களுடன் ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள பாகுவிலிருந்து குரோசினிக்கு சென்றுள்ளது. குரோசினியில் பனிமூட்டம்…

கஜகஸ்தானின் அக்டாவ் அருகே பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது.

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், 105 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களுடன் ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள பாகுவிலிருந்து குரோசினிக்கு சென்றுள்ளது. குரோசினியில் பனிமூட்டம் காரணமாக விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகே சென்றபோது விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனால் அக்டாவ் விமான நிலையத்தை சில முறைகள் வானில் வட்டமிட்ட நிலையில், அவசர தரையிறக்கம் நடைபெற்றது.

தரையிரங்க சென்ற நிலையில் விமானம் வெடித்தது. விமான விபத்தில் 6 பயணிகள் உயிர் தப்பியதாக கஜகஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவத்தின் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.