முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 29-ம் தொடக்கம்; மக்களவை செயலகம் அறிவிப்பு!

இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய்தியில், மக்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிப்ரவரி 15 ஆம் தேதிவரை செயல்படும் நாடாளுமன்ற இரு அவைகளும் அன்றைய தினம் ஒத்திவைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் மார்ச் 8 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் எட்டாம் தேதி வரை நாடாளுமன்றம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை மாநிலங்களவை மாலை நான்கு மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என்றும் மக்களவை செயலகத்தின் செய்திருக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கை அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!

Vandhana

100 கோடி தடுப்பூசி; இலக்கைக் கடந்தது இந்தியா

Halley Karthik

அதிமுக உட்கட்சி பிரச்சனை: பாஜக கூறுவது என்ன?

Web Editor

Leave a Reply