ஆஸ்கர் நூலகத்தில் பார்க்கிங் திரைக்கதை!.. மகிழ்ச்சியில் படக்குழு!

ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் பார்க்கிங் படத்தின் கதையை வைக்க அழைப்பு வந்திருப்பதாக, படத்தின் நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.  ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன்,…

ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் பார்க்கிங் படத்தின் கதையை வைக்க அழைப்பு வந்திருப்பதாக, படத்தின் நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். 

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் பார்க்கிங். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்,  எம்எஸ் பாஸ்கர் இடையே ஏற்படும் சின்ன ஈகோ பிரச்சனை எவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறும் என்பது மிகவும் உணர்வு பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.  சுமார் 3 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 17 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படம் 5 மொழிகளில் ரீமேக் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த படத்திற்கு மீண்டும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

 

இந்த திரைப்படத்தின் கதையை தனது நூலகத்தில் வைப்பதற்காக ஆஸ்கர் அகாதெமி கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து ஹரிஷ் கல்யாண் தனது எக்ஸ் தளத்தில், “ஒரு நல்ல கதை அதற்கான இடத்தை தானே தேடிப்போகும்” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.