#Paralympics2024 | நீண்ட நாள் தோழியிடம் காதலை வெளிப்படுத்திய இத்தாலி வீரர் | புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இத்தாலி வீரர் ஒருவர் தனது நீண்ட நாள் தோழியிடம் காதலை வெளிப்படுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர்…

பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இத்தாலி வீரர் ஒருவர் தனது நீண்ட நாள் தோழியிடம் காதலை வெளிப்படுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், 4ஆம் நாளான செப்டம்பர் 1ஆம் தேதி, ஆடவருக்கான ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் அலெஸாண்ட்ரோ ஓசோலா கலந்துகொண்டு தோல்வி அடைந்தார். எனினும் அவருக்கு அந்த நாள் மறக்க முடியாத நாளாகவே மாறியது. பார்வையாளர்கள் அரங்கில் இருந்த தனது நீண்ட நாள் தோழியான அரியன்னா மந்தரடோனி என்பவரிடம் வந்து மண்டியிட்டு மோதிரத்தை நீட்டி தனது காதலை வெளிப்படுத்தினார்.

இதன் புகைப்படங்களை செப்டம்பர் 2ஆம் தேதி ஓசோலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.