#Pakistan | குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு… 20 பேர் பலி!

பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 30 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று (நவ.9) காலை பயங்கர…

பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 30 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று (நவ.9) காலை பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதனால் அங்கிருந்த மக்கள் அங்கும் இங்கும் ஓடினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. உடனடியாக மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் காயமடைந்தனவர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம்… சாதனை படைத்த #SanjuSamson!

உயிரிழப்பு எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்திற்கு முன்பாக அங்கிருந்து ரயில் ஒன்று புறப்பட்டதாகவும், அந்த ரயில் புறப்படுவதற்கு முன்பாக இச்சம்பவம் நிகழ்ந்திருந்தால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மற்ற நாட்களை விட இன்று ரயில் நிலையத்தில் குறைவான பயணிகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.