11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வந்துள்ள பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி, இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி தனது 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்காக சென்னைக்கு வந்தடைந்த பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.







