இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக, எதிர்கட்சிகள் கொணடு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைந்ததையடுத்து, இம்ரான்கான் அரசு கவிழந்தது. பாகிஸ்தான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், பிரதமர் இம்ரான் கானின்…

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக, எதிர்கட்சிகள் கொணடு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைந்ததையடுத்து, இம்ரான்கான் அரசு கவிழந்தது.

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இது அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தாமாக முன்வந்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. முடிவில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது எனவும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கு எடுப்பு நடத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

 

ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தாமல் சபாநாயகர் தாமதம் செய்து வந்தார். எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்திற்கு பின்னர் நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் 342 பேர் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களில்  174 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து வெற்றி பெற்றதால், இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் எதிர்க்கட்சித்தலைவர்
ஷபாஸ் ஷெரிப் பிரதமராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.