5 மணி நேரமாக ஊருக்குள் உலா வந்த படையப்பா யானை!

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய படையப்பா காட்டுயானை ஊருக்குள் 5 மணி நேரமாக உலா வந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். கேரளா மாநிலத்தில் படையப்பா ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்து சேதம் விளைவித்து வருகிறது.…

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய படையப்பா காட்டுயானை ஊருக்குள் 5 மணி நேரமாக உலா வந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

கேரளா மாநிலத்தில் படையப்பா ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்து சேதம் விளைவித்து வருகிறது. மறையூர் லக்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த யானை, நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அங்கு கால்நடைகளுக்கு உணவுக்காக சேமித்து வைத்திருந்த தீவனங்களை பொறுமையாக தின்று தீர்த்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள தெருக்களில் உலா வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள வீட்டை தாக்கிய நிலையில் தற்போது மீண்டும் அதுபோல நடந்து விடுமோ என அச்சத்தில் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து தவித்தனர்.

இந்த நிலையில் அதிகாலை படையப்பா யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதுள்ளது. ஆனால் அந்த யானை மீண்டும் ஊருக்குள் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.